இது குறித்து இயக்குனர் மணிரத்னத்திற்காக அவர் இசையமைத்த ஒரு பாடலைப் பற்றி ஒரு இசை ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் ரஹ்மான் பேசும் போது “இப்போது பார்த்திபன் ஒரு படம் எடுக்கிறார், அதில் இதே போன்ற பாடலை நாங்கள் முயற்சிசெய்கிறோம்” என்று கூறியிருந்தார்.
இதுபற்றி பார்த்திபன் தனது டுவிட்டரில் ரஹ்மான் பேசிய வீடியோவை வெளியிட்டு “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏ.ஆர்.ஆர் வாய் கேட்பது அரிது! ஆம். ரஹ்மான் இரவின் நிழலில் இருக்கிறார். பெருமை! தற்போது – 3 பாடல்கள் கைவசம். இன்னொன்று-புரமோஷனல் சாங். மிகவும் மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார்.
கடந்த 2001ஆம் ஆண்டு யெலோலோ என்ற இசைப் படம் ஒன்றுக்காக ஏ.ஆர்.ரஹ்மானும், நடிகர் பார்த்திபனும் இணைந்தனர் .ஆனால், சில பிரசனைகள் காரணமாக இப்படம் கைவிடப்பட்டது. இந்நிலையில்,இப்போது, இருவரும் மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.