தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு! முதல்வர் அதிரடி அறிவிப்பு !!
By
admin on April 18, 2021
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று புதிதாக 10,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சில அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பின் விபரம் வருமாறு…
# தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்
# தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட அத்திவாசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி.
# 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு செயல்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
# பெட்ரோல்,டீசல் பங்குகளுக்கு தொடர்ந்து அனுமதி.
# இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி
# தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து.
# பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.
# தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், 50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்.
இவ்வாறு தமிழக அரசு சார்பில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.