இநிலையில் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றிருந்த நடிகர் விஜய் விவேக்கின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததார். இரங்கலையும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று ஜார்ஜியாவின் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய விஜய், இன்று காலை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மறைந்த நடிகர் விவேக் வீட்டிற்கு சென்றார்.விவேக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்,அங்கு இருந்த விவேக்கின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் .