தனது சுவாசத்தை அளித்து கணவனை காப்பாற்ற முயன்ற மனைவி!

நெஞ்சு நொறுங்கிவிட்டது.! 

ஒரு வினாடி இந்த படத்தைப்பார்த்ததும்.! நீங்கள் பழக்கதோஷத்தினால்  வேறு மாதிரியாக  நினைத்திருந்தால் கன்னத்தில் நாலு போட்டுக்கொள்ளுங்கள்,ஒரு பத்தினியின் சாபத்தை வாங்கிக் கட்டிக்  கொள்ளாமல்  இருக்க முடியும்.

உத்தரபிரதேசம் பாஜக ஆளுகிற மாநிலம்.ஆக்ராவில் ஆவாஸ் விகாஸ் 7 ஆவது பகுதியில் வசித்துவருகிறார் ரேணு சிங்கால் என்கிற பெண்மணி.

இவரது கணவர் ரவி சிங்கால் .கோவிட் 19 கொள்ளை நோய். இவருக்கு சாகும் வயதல்ல .46 வயதுதான் ஆகிறது. 

கணவருக்கு நோயின் கடுமை அதிகமாகவே ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு மருத்துவ மனைக்கு விரைந்து சென்றார்.

 

கணவரின் வாயில் தனது வாயை வைத்து தன்னுடைய சுவாசத்தை அளித்தார் . ஆனால் பலனில்லை. ஆவி பிரிந்துவிட்டது.மனைவியின் மடியிலேயே கணவனின் உயிர் போனது. என்னெவெல்லாம் நினைத்திருந்தாரோ அந்த பத்தினி. யாருக்கெல்லாம் சாபமிட்டாரோ!ஆக்சிசன் பற்றாக்குறையினால் போன உயிர்களில் ரவி சிங்காலும் ஒருவர்.

கொரானா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லை. ஆக்சிசன் இல்லை. 

கொடுமை !

 

 

 

 

ஆக்ராரவி சிங்கால்ரேணு சிங்கால்