நெஞ்சு நொறுங்கிவிட்டது.!
ஒரு வினாடி இந்த படத்தைப்பார்த்ததும்.! நீங்கள் பழக்கதோஷத்தினால் வேறு மாதிரியாக நினைத்திருந்தால் கன்னத்தில் நாலு போட்டுக்கொள்ளுங்கள்,ஒரு பத்தினியின் சாபத்தை வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும்.
உத்தரபிரதேசம் பாஜக ஆளுகிற மாநிலம்.ஆக்ராவில் ஆவாஸ் விகாஸ் 7 ஆவது பகுதியில் வசித்துவருகிறார் ரேணு சிங்கால் என்கிற பெண்மணி.
இவரது கணவர் ரவி சிங்கால் .கோவிட் 19 கொள்ளை நோய். இவருக்கு சாகும் வயதல்ல .46 வயதுதான் ஆகிறது.
மூச்சுவிட திணறவே வேறு வழியின்றி ரேணுவுக்கு தெரிந்த செயற்கை சுவாச முறையில் முதல் உதவி செய்தார்.
கொரானா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லை. ஆக்சிசன் இல்லை.
கொடுமை !