உலக அளவில் திரைத்துறை கலைஞர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இன்று அறிவிக்கப்பட்டது.இதில் சிறந்த இயக்குநராக சீனாவின் க்ளோயி சாவ் தேர்வாகியிருக்கிறார். ஆஸ்கரின் 93 வருட வரலாற்றிலேயே பெண் இயக்குநருக்கு இரண்டாவது முறையாக சிறந்த இயக்குநர் விருது கிடைத்துள்ளது.
சிறந்த நடிகருக்கான விருது பழம்பெரும் நடிகர் ஆன்டனி ஹாப்கின்ஸுக்கு (வயது 83) தி ஃபாதர்” என்ற படத்தில் நடித்ததற்காக கிடைத்துள்ளது.
சிறந்த நடிக்கைக்கான விருது ஃபிரான்ட்சிஸ் மெக்டோராமெண்டுக்கு ‘நோமேட்லேண்ட்’ படத்தில் நடித்ததற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் பட்டியலுக்கு 70 பெண்கள் பரிந்துரைக்கப்பட்டதில் 17 பெண்கள் ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்றுள்ளனர்.
சரி, பட்டியலை பார்ப்போம்…
1, சிறந்த படம் – நோ மேட்லாண்ட்
2, சிறந்த இயக்குநர் – க்ளோயி சாவ் (நோ மேட்லாண்ட்)
3, சிறந்த நடிகர் – ஆன்டணி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்)
4, சிறந்த நடிகை – ஃபிரான்ட்சிஸ் மெக்டோர்மென்ட் (நோ மேட்லாண்ட்)
5, சிறந்த ஆவணப்படம் – மை ஆக்டோபஸ் டீச்சர்
6, சிறந்த வெளிநாட்டு படம் – அனதர் ரவுண்ட் (டென்மார்க்)
7, அனிமேஷன் திரைப்படம் – சோல்
8, சிறந்த அனிமேஷன் குறும்படம் – இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ
9, சிறந்த ஆவண குறும்படம் – கோலெட்
10, சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – டூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர்
11, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே, ஸ்காட் பிஸ்சர் (டெனெட்)
12, சிறந்த ஒளிப்பதிவாளர் – எரிக் மெசர்ச்மிட் (மங்க்)
13, சிறந்த படத்தொகுப்பாளர் – மைக்கேல் நீல்சன் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)
14, சிறந்த திரைக்கதை – எமரால்டு பென்னல் (பிராமிசிங் யங் வுமன்)
15, சிறந்த தழுவல் திரைக்கதை – கிறிஸ்டோபர் ஹாம்ப்டன், புளோரியன் செல்லர் (தி பாதர்)
16, சிறந்த பின்னணி இசை – ட்ரெண்ட் ரெஸ்னர், அட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்டி (சோல்)
17, சிறந்த பாடல் – பைட் ஃபார் யூ, ஜுடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா
18, சிறந்த துணை நடிகர் – டேனியல் கல்லூயா (ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா)
19, சிறந்த துணை நடிகை – யூ ஜங் யூன் (மினாரி)
20, சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – லோபஸ் ரிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் (பிளாக் பாட்டம்)
21, ஆடை வடிவமைப்பு – அன் ரோத் (பிளாக் பாட்டம்)
22, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – டொனால்டு கிரஹாம் பர்ட், ஜன் பாஸ்கல் (மங்க்)
23, சிறந்த ஒலி அமைப்பு – நிகோலஸ் பெக்கர், ஜேமி பக்ஷித், மிட்சல் கவுட்டோலென், கார்லஸ் கார்டெஸ், பிலிப் பிலாத் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)