‘மகுடம்’ படத்தின் ‘கலங்காதே’ பாடல் வெளியானது!
ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் 99 -வது திரைப்படமாகவும்,,நடிகர் விஷாலின் 35-வது திரைப்படமாகவும் ‘மகுடம்’ உருவாகி வருகிறது.இப்படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, அஞ்சலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். .நடிகர் விஷால் 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்து முதல் முறையாக இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் . இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் போஸ்டர், டீசர் மற்றும் பாடல் வெளியாகின.
சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ‘ரைஸ் ஆப் லிங்கா’ பாடலை படக்குழு வெளியிட்டது அதை தொடர்ந்து, 2 வது பாடலான ‘நச்சிந்தி மச்சானே’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை ஏகாதசி வரிகளில் மங்லி, வேல்முருகன் இணைந்து பாடி இருந்தனர் இவ்விரு பாடல்களும் வரும் நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து பாடியுள்ள ‘மகுடம்’ படத்தின் 3 வது சிங்கிளாக ‘கலங்காதே’ பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது . இப் பாடலை கருணாகரன் எழுதியுள்ளார்….