Monday, July 27, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டரின் ‘டான்ஸ் டான் 2’ நிகழ்வு!

admin by admin
July 27, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘மகுடம்’ படத்தின் ‘கலங்காதே’ பாடல் வெளியானது!

ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!

திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக நடனப் பயிற்சி வழங்கி வரும் கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி, தங்கள் மாணவர்களை ஊக்குவிக்கவும், இதர கலைஞர்களை கௌரவிக்கவும் நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ‘டான்ஸ் டான் 2’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி இன்று (ஜூலை 25) சென்னையில் நடத்தி வருகிறது. வேல்ஸ் கலையரங்கில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்காக இதுவரை இல்லாத ஒரு முன்னெடுப்பை கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி மேற்கொண்டுள்ளது.
1973ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை திரைத்துறையில் பங்காற்றி வரும் 125 நடன இயக்குநர்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 38 நடனப் பள்ளி ஆசிரியர்கள் ‘டான்ஸ் டான் 2’ நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். இதனுடன், கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி மாணவர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து பேசிய நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டர், “இத்தனை வருடங்களாக திரைத்துறையில் பணியாற்றி வரும் எனக்கு, நமக்கு முன்னர், நம்முடன் மற்றும் நமக்குப் பின்னர் நடன இயக்குநர்களாக அறிமுகமாகி பங்காற்றியவர்கள் குறித்த ஒரு தேடலைத் தொடங்கினேன். இவர்கள் குறித்து பல்வேறு ஆதாரங்களைச் சேகரித்தபோதுதான், 1973 முதல் நடனம் அமைத்த கலைஞர்கள் 125 பேர் தற்போது உள்ளார்கள் என்ற ஆச்சரியமான தகவல் தெரியவந்தது.
இவர்களில் சிலர் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோருடன் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை அனைவரையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடனப் பள்ளிகளை நடத்தி வரும் 38 ஆசிரியர்களையும் கௌரவித்து வருகிறோம்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த 125 பேரில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தற்போது வாய்ப்புகள் இல்லை. அதேபோல், நடன ஆசிரியர்கள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களது நடனப் பள்ளிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடன இயக்குநர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து, நடனப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிச்சமும் ஊக்கமும் கிடைத்தால் பெரிதும் மகிழ்ச்சியடைவேன்,” என்றார்.
admin

admin

Related Posts

‘மகுடம்’ படத்தின்  ‘கலங்காதே’ பாடல் வெளியானது!
News

‘மகுடம்’ படத்தின் ‘கலங்காதே’ பாடல் வெளியானது!

by admin
July 27, 2026
ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!
News

ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!

by admin
July 27, 2026
திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற  வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !
News

திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !

by admin
July 27, 2026
கிராமத்து மக்களை மிரட்டும் ‘பவானி’ பேய்!
News

கிராமத்து மக்களை மிரட்டும் ‘பவானி’ பேய்!

by admin
July 27, 2026
ஜிவி பிரகாஷ் , சீனு ராமசாமி கூட்டணியில்  உருவான  ’இடிமுழக்கம்’ ! லிரிக்கல் வீடியோவெளியானது!
News

ஜிவி பிரகாஷ் , சீனு ராமசாமி கூட்டணியில் உருவான ’இடிமுழக்கம்’ ! லிரிக்கல் வீடியோவெளியானது!

by admin
July 26, 2026

Recent News

ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!

ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!

July 27, 2026
திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற  வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !

திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !

July 27, 2026
நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டரின் ‘டான்ஸ் டான் 2’ நிகழ்வு!

நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டரின் ‘டான்ஸ் டான் 2’ நிகழ்வு!

July 27, 2026
கிராமத்து மக்களை மிரட்டும் ‘பவானி’ பேய்!

கிராமத்து மக்களை மிரட்டும் ‘பவானி’ பேய்!

July 27, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?