அதிகாரம்-பணம் விளையாடும் பகடையாட்டம்தான் ‘பவர் ப்ளே ‘!

வனமாலி கிரியேஷன்ஸ் பி.லிட் சார்பில் மகேந்தர், தேவேஷ் தயாரித்துள்ல புதிய படம்,  ‘பவர் ப்ளே’.இதில் கதாநாயகனாக  ராஜ் தருண் நடித்துள்ளார்.இவர் தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.

தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் பரிச்சயமான பூர்ணாவுக்கு  முக்கியமான வில்லி வேடம் .கோட்டா சீனிவாச ராவ் வில்லத்தனத்தில் பூர்ணாவுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார்.

மற்றும் ஹேமா லிங்கலே, பிரின்ஸ் ,அஜய், சத்யம் ராஜேஷ், பூஜா ராமச்சந்திரன், ராஜா ரவீந்திரா, கேதார் சங்கர், ரவிவர்மா, தன்ராஜ் ஆகியோரும்நடித்துள்ளனர்.

இப்படத்தை இயக்கியுள்ள விஜயகுமார் கொண்டா கூறுகையில்,” பணம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையில் அதிகாரம் எப்படி விளையாடுகிறது என்பதைக் கூறுகிற கதை இது.

அதிகாரமும் பணமும் விளையாடினால் அந்தப் பகடையாட்டம் எப்படி இருக்கும்? அது தான் இந்த ‘பவர் ப்ளே’ படத்தின் கதை. நாயகன்.ஒருநாள் ஏடிஎம் மையத்திற்குச் சென்று பணம் எடுக்கிறான் .வெளிவந்த ரூபாய் நோட்டுகளைப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.

அவனிடம் வந்தவை போலியான ரூபாய் நோட்டுகளாக இருந்தன .இதன் பின்னே ஏதோ சதி இருப்பதாக உணர்கிறான். இதற்குக் காரணமாக யாரோ அதிகாரம் படைத்தவர்கள்தான் இருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரிகிறது. .

ஆனால் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான். ஏடிஎம் மையங்களில் ரூபாய் நோட்டுகளை நிரப்புவதற்காகப் பல ஏஜென்சிகள் உள்ளன. அவர்கள் செய்த  சதியால் தான் இவ்வாறு போலி ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்டது என்று தெரிகிறது .அதிலிருந்து அவன் எப்படி தப்பிக்கப் போராடுகிறான் என்பதும் தான் ‘பவர் ப்ளே’  என்கிறார். .

இப்படத்தின் ஒளிப்பதிவை ஆண்ட்ரூ கவனிக்க, சுரேஷ் பொப்பிலி,இசையமைத்துள்ளார்.

கோட்டா சீனிவாசராவ்பவர் ப்ளேபூர்ணாவிஜயகுமார்