பெண் தயாரிப்பாளர் முகத்தில் ‘விஸ்கி’யை வீசிய பிரபல நடிகை.!

போடா முண்டம் படத்தில் நடித்து வருகிறவர் சஞ்சனா கல்ராணி. நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி.

இவர் மீது பல்வேறு வழக்குகள் உண்டு. குறிப்பாக போதை பொருள் வழக்கு..

இவருக்கும் கன்னட போலீசுக்கும் என்ன பிணைப்போ தெரியாது.அடிக்கடி மாட்டிக் கொள்வார்.

இவர் மீது பெங்களூரு கப்பன் பார்க் போலீசார் எப்.ஐ.ஆர் .தாக்கல் செய்திருக்கிறார்கள்.

பிரபல திரைப்படத்தயாரிப்பாளர் வந்தனா ஜெயின் முகத்தில் சஞ்சனா கல்ராணி  விஸ்கியை வீசி கண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக.! 

கிறிஸ்துமஸ் நாளுக்கு முதல் நாள் ,

காஜா கிளப்பில் கல்ராணி ஒரு டேபிளில் அமர்ந்து நண்பருடன் அமர்ந்து பேசிக்  கொண்டிருந்திருக்கிறார்.உற்சாகமாக போயிருக்கிறது பேச்சு. பார்ட்டி என்றால் கேட்கவா வேண்டும் ஜாலிதான்.

கல்ராணியுடன் அமர்ந்திருந்த நண்பர் தயாரிப்பாளர் வந்தனாவுக்கும்   தெரிந்தவர். இரவு 11 மணி இருக்கும் .அந்த டேபிளுக்கு வந்த வந்தனா  அவரது நண்பரை பார்த்ததும் குஷியாகிவிட்டார். சரக்கு வேற !இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். கல்ராணியை கண்டு கொள்ளவேயில்லை வந்தனா.ரெண்டு பெண்களுக்கும் என்ன  பிரச்சனையோ தெரியாது..

என்னடா இது இருவருமே திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் ,பேசிக் கொள்ளவே யில்லையே என்கிற சந்தேகத்துடன் “என்னம்மா , உனக்கு நடிகை சஞ்சனா கல்ராணியை தெரியாதா, ஏன் பேசாம இருக்கிறே ?”என்று கேட்டிருக்கிறார்.

இந்த கேள்வி கல்ராணியை இரிட்டேட் பண்ணவே வந்தனாவை  கண்டபடி பேசியிருக்கிறார். தடித்த வார்த்தைகள்.

ஆத்திரம் தலைக்கேற தன்னுடைய டேபிளில் கிளாசில் இருந்த விஸ்கியை அப்படியே வந்தனாவின்  முகத்தில் வீசி இருக்கிறார்.

வந்தனா துடித்துப்போய்விட்டார். கண் விழிகளில்  இறங்கிய விஸ்கி வேலையை காட்டிவிட்டது. 

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. 

சஞ்சனாவுக்கும் வந்தனாவுக்கும் ஏற்கனவே பிரச்னை இருந்திருக்கிறது. உள்ளூர் டி .வி.யில் வந்தனாவை கண்டபடி விமர்சித்து பேசியிருக்கிறார்..

விஸ்கி வீச்சு  பற்றி புகார் அளித்திருந்தும் கொரானா காரணாமாக 16 மாதங்களாக  எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது கொரானா முற்றிய நிலையில் கப்பன் பார்க் போலீசார் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் .

 

 

“

சஞ்சனா கல்ராணிவந்தனாவிஸ்கி வீச்சு