ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் சபாஷ் நாயுடு படத்தின் பூஜை சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நடந்தது. கமல், ஸ்ருதி ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினரோடு நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.இவ்விழாவில்
ராஜீவ் குமார் இயக்கத்தில் 25 வருடங்களுக்கு பிறகு நடிப்பதில் சந்தோஷம். ஸ்ருதி ஹாசனைப் பொறுத்தவரை கமல் பெண் தானே, அதான் நடிக்கிறார் என்று யாரும் சொல்லிவிடக் கூடாதே என்று நினைப்பு காரணமாகத் தான் அவருடன் நடிக்காமலே இருந்தேன். ராஜ்கமல் நிறுவனம் ஒரு ஸ்டாரை ஒப்பந்தம் செய்வது போலத் தான் இப்படத்தில் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். எனக்கு மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ரஹ்மானின் ‘பாம்பே ட்ரீம்ஸ்’ இசை நாடகத்தில் நாயகனாக நடித்த மனுப் நாராயணன் இப்படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.தசாவதாரம் பல்ராம் நாயுடு பாத்திரத்திற்கும் இதற்கும் தொடர்புண்டு. பல்ராம் நாயுடுவின் தனிவாழ்க்கை தான் இந்தப் படம்.இதில்,4 பாட்டு முடிவு பண்ணியிருக்கிறோம்.
நடிகர் சங்கம் தொடர்பான அஜித்,விஜய் விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன்.அவர்கள் ஒதுங்கி இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். அதைப் பற்றி நான் பேசக் கூடாது. இது ஒரு குடும்பம். நடிகர் சங்கத்தை பொறுத்தவரை அதன் கதவு எப்போது ம் திறந்திருக்கும், அவர்கள் வரவுக்காக நடிகர் சங்கம்காத்திருக்கிறது.லைக்கா நிறுவனத்தினர் ‘மருதநாயகம்’ எங்களுக்கு தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன்பு ஒரு படம் பண்ணலாம் என்று இதைப் பண்ணியிருக்கிறோம்.
எனக்கு ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்.அதில் நான் தலையிட மாட்டேன் இவ்வாறு அவர் பேசினார்.