பாலிவுட் நடிகை நீனா குப்தா.
ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து போகக்கூடிய நடிகை இல்லை.
பிரபல கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்டுடன் வாழ்ந்து பெண் குழந்தை பெற்றுக்கொண்டவர். தென்னாப்பிரிக்க அணியில் முக்கியமானவர்.சிறந்த ஆட்டக்காரர்.
நீனாவுக்கு தற்போது வயதாகிவிட்டது. ஆனாலும் நினைவுகளுக்கு ஏது வயதும் காலமும்?
நல்லவை எவ்வளவோ நடந்திருந்தாலும் துருத்திக்கொண்டு நிற்பது என்னவோ துயரங்கள்தான்!
இளமையாக இருந்த காலத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் வலியுறுத்தல் பற்றி சொல்லியிருக்கிறார்.
“ஒரு தயாரிப்பாளர் தங்கியிருந்த ஹோட்டலில் என்னை அவரது ரூமுக்கு வரும்படி அழைத்தார்.
என்னுடைய உள்மனது “நீ அங்கு போகவேண்டாம், அவரை கீழே இருக்கிற லாபி யில் வந்து சந்திக்கும்படி சொல் “என்றது.
ஆனாலும் மனதை திடப்படுத்திக்கொண்டு மாடியில் இருக்கிற அவரது அறைக்கு சென்றேன்.
சோபாவில் அமர சொன்னார்.தென்னிந்திய பட உலகில் அவர் அறிமுகம் செய்ததாக சில நடிகைகளின் பெயர்களை சொன்னார். எனக்கும் ஒரு கேரக்டரை தருவதாக சொன்னார்.நான் அமைதியாக அந்த கேரக்டரில் நடிக விருப்பமில்லை என்பதை சொன்னேன்.
அதற்கு அவர் “இன்றைய இரவு என்னுடன் இருக்க விரும்பவில்லையா ?”என கேட்டார்.
என்னுடைய இரத்தம் உறைந்து விடுவதைப்போன்ற உணர்வு.
எனது கைப்பையை தூக்கி என் கையில் திணித்து “வெளியே போ” என்று விரட்டினார்.
நல்ல சமயமடா என்று ஓடோடி வந்து விட்டேன் “என தன்னுடைய நினைவுகளை பதிவு செய்திருக்கிறார் நீனா.
தெற்கில் நடிகைகளை அறிமுகப்படுத்துகிற அந்த தயாரிப்பாளர் யாராக இருக்க முடியும்?