பள ..பள வெள்ளை ஷூ ! நனையாமல் இருக்க அமைச்சரை சுமந்த மீனவர்கள்.!

கடல் அரிப்பை கண்டறிவதற்காக தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பழவேற்காடு சென்றார்.

இவர் ஜெயலலிதா காலத்திய அதிமுக பிரமுகர் . திமுகவில் இணைந்து விட்டவர் . அமைச்சர் பதவியும் கிடைத்திருக்கிறது.

ஸ்டார்ச் போட்ட வேட்டி ,சட்டை ,இதற்கு மேட்ச்சாக பள … பள வெள்ளை கட் ஷூ .எங்கெல்லாம் பாதிப்பு இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக அமைச்சர் படகில் சென்றார். திரும்பி வந்த பின்னர் கெண்டைக்கால் அளவு  கடல் நீரில் நடந்துதான் கரைக்கு வரவேண்டும்.,

அடடா ..! வரமுடியாதே! கட் ஷூ உப்பு நீரில் நனையலாமா?

வேறு வழி ? மீனவர்களை சுமந்து செல்ல பணித்திருக்கிறார். அவர்களும் அமைச்சரின் வெள்ளை ஷூ நனையாமல் கரைக்கு சுமந்து சென்று இறக்கி விட்டிருக்கிறார்கள்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.!

அனிதா ராதாகிருஷ்ணன்