நடிப்பைத் தாண்டி நடிகர் நடிகைகள் பலரும் தற்போது தொழில் தொடங்குவது அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நடிகர்,நடிகைகள் பிற நிறுவனங்களில் முதலீடும் செய்து வருகின்றனர்.
இதையடுத்து ஏஞ்சல் முதலீட்டாளர்கள்மற்றும் மும்பையைச் சேர்ந்த யூனியன் நெட்வொர்க்கும் இந்த நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்துள்ளது சுனில்குமார் சிங்வி, மணி ஸ்மார்ட் முதலீட்டாளர்கள் உள்ள இந்த பட்டியலில் தற்போது நடிகை நயன்தாராவும் அவரது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் இணைந்துள்ளனர்.
இதுகுறித்து சாய் வாலே நிறுவனர் விதூ மகேஸ்வரி கூறும்போது, ‘அடுத்த வருடத்திற்குள் சாய் வாலேவின் 35 கடைகளை திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். மீதமுள்ள தொகையை எங்கள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கு பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாய் வாலே தனது பல கிளைகளை திறக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது