அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலா னது.இதையடுத்து கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நட்சத்திரவிடுதி ஒன்றில் மீரா மிதுன்அவருடைய ஆண் நண்பருடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது.இதையடுத்து கேரளாவில் பதுங்கியிருந்த மீராமீதுணை சென்னை மத்தியகுற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
அப்போது போலீசாருடன்நடிகை மீரா மிதுன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அவரது செல்போனைபோலீசார் பறிமுதல் செய்ய முயன்ற போது , “தன்னை போலீசார் கொடுமைபடுத்துவதாக கூறி மீரா மிதுனே வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலை தளததில் பரப்பினார். அதன்பிறகுபோலீசார்செல்போனைபறிமுதல் செய்தனர்.
மீரா மிதுனை கைது செய்தபோது அவரது ஆண் நண்பர் அபிஷேக்கையும் போலீசார் அதே வாகனத்தில் அழைத்து வந்தனர்.பெண் போலீ சாரின் உதவியோடு கைதானமீரா மிதுனை சென்னை காவல் ஆணையர் அலுவல கத்திற்கு இன்று காலை 11.30 மணிக்கு கொண்டு வரப்பட்டார். 24 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்டதால் டிராண்சிட் வாரண்டு பெறவில்லை என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீ சார் தெரிவித்துள்ளனர்.
சென்னைகாவல் ஆணையர் அலுவலகத்திற்கு 4– வது நுழைவுவாயில் வழியாக உள்ளே கொண்டு வந்தனர். அப்போது மீரா மிதுன்,“தன்னுடைய கையை போலீ சார் உடைக்க முயன்றதாகவும் போலீசார் கொடுமை படுத்துவதாகவும், சாப்பாடு கொடுக்க வில்லை என்றும்” சத்தமிட் டபடியே சென்றதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பிறகு முதல் தளத்தில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீராமிதுனுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் மீரா மிதுன் விசா ரணைக்கு ஒத்துழைக்காமல் தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்.
பின்னர் கொரோனா உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்த மீரா மிதுனை சைதாப்பேட்டை 17 வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கிருஷ்ணன் வீட்டில் ஆஜர்படுத்தினர்.இவ் வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்ற நடுவர் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை நடிகை மீரா மிதுனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.