சிறுத்தைசிவா இயக்கத்தில் உருவாக்கி வந்த ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தபடம் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளரை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடு பட்டு வந்த ரஜினிகாந்த் ஓசையில்லாமல் தனது அடுத்தப்பட்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை முடிவு செய்து விட்டதாகவும், இதையடுத்து பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் ரஜினி தனியாக தியானத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில்,தற்போது ரஜினிகாந்த் தனது இரு மகள்களான ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் செளந்தர்யா ஆகியோருடன் சென்று ஆன்மிக குரு ரவிசங்கர் ஜியை சந்தித்த புகைப்படம் ஓன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்புகைப்படத்தை ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பகிர்ந்துள்ளனர்.
ரஜினிகாந்த்தின் இளைய மகளான செளந்தர்யா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் தனது கணவர் வசீகரனுடன், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்ற செளந்தர்யா, சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்திய நிலையில், தற்போது ரஜினி தனது மகள்களுடன் சென்று ரவிசங்கர் ஜியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
பொதுவாக ரஜினிகாந்த் காந்த் தனது இரு மகள்களுடன் சேர்ந்து வெளியி டங்களுக்கு செல்லும்புகைப்படங்கள் புகைப்படங்கள் மிக அரிதாகவே வெளியாகும்.என்பது குறிப்பிடத்தக்கது.