பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், இந்த இல்லம் புனிதமான இடம் என்பதால் பிறந்த நாளன்று இங்கு வந்துள்ளதாகவும்,பிறந்த நாளன்று நிறைய நல்ல விசயங்கள் நடப்பதால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தனது பிறந்த நாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறிய விஷால்,ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்பதாகவும் அவர் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்றார்.
முக.ஸ்டாலின் நன்றாக ஆட்சி செய்வார் என்பதால் தான் மக்கள் அவரை தேர்ந்தெடுத்ததாகவும் மேலும் சிறப்பாக அவர் செயல்படுவார் என நம்புவதாகவும் கூறினார்.