லதா ரஜினிகாந்த் நடத்தும் பள்ளிக்கூடப் பணியாளர்கள் போராட்டம்.!

ஊழலைக் கண்டித்து அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தவர் ரஜினிகாந்த் .”உயிரே போனாலும் பின் வாங்கேன் ” பின்னர் உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியல் பிரவேசத்தை கைவிட்டார். 

இவரது மனைவி லதா நடத்துவது ஆஷ்ரம் பள்ளி. இந்தப் பள்ளியில் பணக்கார வீட்டுப்பிள்ளைகளே படிக்க இயலும். அந்த அளவுக்கு காஸ்ட்லீ.! இந்த பள்ளியில் கடந்த ஒன்றரை வருடமாக பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லையாம்.! இதனால் அவர்கள் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.

150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பள்ளி நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கண்டித்து ஊழியர்கள்  பள்ளி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

செய்தியாளர்களிடம் பேசிய ஊழியர்கள், ’கொரொனோ  காலகட்டத்தில் தங்களுக்கான முறையான ஊதியத்தை வழங்காமல் பள்ளி நிர்வாகம் தங்களை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டினர். தொடர்ந்து இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டிய  பள்ளி ஊழியர்கள், தாங்கள் படும் சிரமத்தை கருத்தில் கொண்டு ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த பணத்திலிருந்து தங்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்தனர்.
ஊழியர்களுக்கு நிர்வாகம் வழங்க வேண்டிய பங்களிப்பு தொகையினையும் இதுவரை நிர்வாகம் செலுத்தாமல் இருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஆஷ்ரம் பள்ளிஊழியர்கள் போராட்டம்