“ஏம்பா ,உங்களுக்கு அறிவு இருக்கா ?”-மீடியாவை கேட்கிறார் சமந்தா.!

திருமலைக்கு தரிசனம் செய்ய வந்த நடிகை சமந்தாவை குத்திவிட்டால் அவர் சும்மா இருப்பாரா?

அதிகாலை தரிசனத்துக்கு வந்த சமந்தாவிடம் திருப்பதியை சேர்ந்த பத்திரிகையாளர் மைக்கை நீட்டினார்.

சாமியை கும்பிட்டுவிட்டு வந்த அவரும் செய்தியாளரின் கேள்வியை புன்னகையுடன் எதிர்கொள்ள ,அவரோ ‘நாக சைதன்யா -சமந்தா தொடர்பான டைவர்ஸ் பற்றிய வதந்தியை’ பற்றி கேட்டு விட்டார்.

அவ்வளவுதான் ”  நான் இப்ப கோவிலுக்கு வந்திருக்கேன் ,உனக்கு புத்தி இருக்கா?” என்று தலையை சுட்டிக்காட்டியபடி கேட்டு விட்டார்.

என்னத்த சொல்ல? 

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு!

சமந்தாதிருமலைநாகசைதன்யா