நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் ‘திடீர்’ அனுமதி!

நடிகர் ரஜினிகாந்த் டெல்லியில் தாதா சாகேப் பால்கே விருதை பெற்ற நிலையில்,  கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சென்னை திரும்பினார். 
நேற்று இரவு சென்னை சத்யம் திரையரங்கில்  தனது குடும்பத்தினருடன் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சியை தனது பேரன்மற்றும்  குடும்பத்தினருடன்   பார்த்ததாக ‘ஹூட்’ செயலியில் இன்று காலை அவர் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை திடீரென சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் வழக்கமான உடல்நிலை பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த பூரண நலத்துடன் உள்ளதாகவும், பரிசோதனை முடிந்து விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.ஆனாலும் லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் தான் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.