இயக்குநர் பாரதிராஜா: “கன்னட பவர் ஸ்டாரான எனது நண்பர் ராஜ்குமாரின் சினிமா வாரிசு இப்போது இல்லை என்று கேட்பது நெஞ்சை உலுக்கும் செய்தி. புனித் ராஜ் குமாரின் அத்தகைய சிறந்த இளம் இதயத்திற்கு இயற்கையின் இதயம் இல்லை. இது அவரது குடும்பத்திற்கும் தென்னிந்தியத் திரையுலகிற்கும் தாங்க முடியாத இழப்பு. அவரது குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் என ஆழ்ந்த இரங்கல்கள்… இவ்வாறு பாரதிராஜா பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன் : அன்புத் தம்பி புனீத் ராஜ்குமாரின் மரணச் செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கன்னடத் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.. என பதிவிட்டுள்ளார்.
அஜித் மற்றும் ஷாலினி: நடிகர் புனித் ராஜ்குமாரின் துரதிர்ஷடவசமான மறைவை கேட்டு வருந்துகிறேன். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த துயரத்திலிருந்து மீள வலிமை பெறட்டும்.
மோகன் லால்: புனித் ராஜ்குமாரின் இழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. என்னுடை தம்பியை இழந்துவிட்டதை போல் உணருகிறேன். நான் நெருங்கிய உறவை கொண்டிருந்தவரின் குடும்பத்திற்கு என்னுடைய பிரார்த்தனைகள். அவர்கள் இந்த இழப்பைச் சமாளிக்கும் வலிமையையும் ஆறுதலையும் பெற வேண்டும் .
நடிகர் மகேஷ்பாபு : புனித் ராஜ்குமாரின் மறைவுச் செய்தியால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன். நான் சந்தித்த, பழகிய மிகவும் எளிமையான மனிதர்களில் அவரும் ஒருவர். அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அபிஷேக் பச்சன்: இதயத்தை நொறுக்கும் செய்தி. இவ்வளவு சீக்கிரம் விட்டுப் பிரிந்துவிட்டார். அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் என் அனுதாபங்கள். நீங்கள் இல்லாத குறையை உணர்வோம்.
மாதவன்: போய்விட்டது…எங்கள் அன்பான, அழகான மற்றும் உன்னதமான ஆத்மாக்களில் ஒன்று. நான் என்ன உணர்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் மிகவும் பேரழிவை உணர்கிறேன். சகோ நீங்கள் எங்களை மிகவும் குழப்பத்திலும் மனதையும் உடைத்து விட்டீர்கள். இது உண்மையல்ல என்று நான் இன்னும் நம்புகிறேன்.