இந்நிலையில், ரவி தேஜா புதிய படமொன்றில் ரவி தேஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ என்று பெயரிடப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் இது உருவாகிறது. இப்படத்தின் கதை, 1970-களில் வாழ்ந்த துணிச்சல் மிகுந்த பலே திருடன் மற்றும் ஸ்டூவர்ட்புரம் மக்கள் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.
டைட்டில் போஸ்டரை பொருத்தவரை, ரவி தேஜாவின் கால் அடையாளங்கள் புலி பாதத்தைக் குறிக்கின்றன. கதாபாத்திரத்தின் சக்தியையும், ஆழத்தையும் அது தெளிவாக சொல்கிறது. போஸ்டரில் அவர் ரயிலை துரத்துவது போல் தெரிகிறது. ‘வேட்டைக்கு முன் அமைதியை உணருங்கள்’ (Feel the silence before the hunt) என்ற வாசகம் போஸ்டருக்கு மேலும் சுவாரஸ்யம் ஊட்டுகிறது.
ஆர் மதி ஐஎஸ்சி ஒளிப்பதிவை கையாள, ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதி வருகிறார்.இப் படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும்.என தெரிகிறது