எனக்கு நல்ல நாடகங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும். மீண்டும் நாடகங்கள் நடிக்க ஆசை. இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கண்டிப்பாக வேறு மேடை ஏற உள்ளேன். அரசியல் மேடை இல்லை. மும்பையில் சசிகபூர் அவர்கள் பிரித்வி தியேட்டர் என ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். அது போல் ஒன்றை இங்கு அமைக்க ஆசைப்படுகிறேன். இந்த நாடகத்தை பொறுத்த வரையில் நிறைய சொல்ல வேண்டும். எனது உத்தம வில்லனில் ஒரு பாடல் வரும் சாகாவரம் போல் சோகம் உண்டோ என்ற பாடல் அந்த பாடலின் மேம்பட்ட வடிவமாகத் தான் இந்த நாடகம் உள்ளது. மரணத்துடனான அழகான உரையாடலாக இந்த நாடகம் அமைந்துள்ளது. இந்த உரையாடலை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நம் அனைவருக்குமான தேதி நிச்சயிக்கப்பட்ட தேதி. வீடு கட்டும் போது கழிவறை பற்றி சிந்திக்க மாட்டோம். வாழ்கைக்கு இருக்கும் மரியாதை மரணத்திற்கு தரப்பட வேண்டும் அதை இந்த நாடகம் செய்துள்ளது. என்னுடைய பிறந்தநாள் சிறப்பாக இதை அரங்கேற்றியதாக கூறியதற்கு நன்றி. நாம் அனைவரும் உணர வேண்டிய உண்மையை அழகாக மென்மையாக எடுத்துரைக்கிறது இந்த நாடகம். இந்த நாடகத்தை அரங்கேற்றுவதும், அதில் நான் கலந்து கொள்வதும் மகிழ்ச்சி.
என்னைப் பொருத்தவரை இந்த நாடகத்தை என் பிறந்தநாளுக்காக போட்டதாக சொன்னார்கள். அது எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதற்கு நானும் ஒரு காரணமாக இருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ஆனால் இந்த நாடகம் எனக்கு சொன்ன புத்திமதி போல் என் தந்தையாரும். சொல்லிவிட்டுத்தான் சென்றிருக்கிறார். என்னுடைய பிறந்த நாளும் அவருடைய இறந்த நாளும் ஒன்று தான். நிறைய நாடகம் பாக்கணும். நிறையபேர் நாடகத்தில் நடிக்கணும். நிறைய ஒத்திகை பாக்கணும். இதில் கலந்து கொண்ட ஒருத்தர் சொன்னாரு, நான் ஒத்திகைக்கு போகலேன்னா நாடகத்திலேயே என்னை இல்லாம பண்ணிடுவாருன்னு சொன்னாரு பாருங்க, அதுக்கே ஒரு சபாஷ் போடலாம். ஏன்னா, நான் வேலை பார்க்கிற இடத்துல ஒத்திகைக்கே மரியாதையே கிடையாது. சினிமா நட்சத்திரங்கள் ஒத்திகையே விரும்ப மாட்டாங்க.. அவர்களுக்கெல்லாம் அப்படியே எரிமலைகள் எல்லாம் தெறித்து விழுந்து விடும் என்ற நம்பிக்கை. ஒத்திகையை விரும்பும் ஒரு வாத்தியார் எனக்கு இருந்ததால் அந்த ஒத்திகையின் பெருமை எனக்கு தெரியும். நான் சினிமாவுக்கு ஒத்திகை பார்ப்பேன் நாடகத்துக்கு ஒத்திகை பார்க்கும் அளவுக்கு பார்ப்பேன். ஒத்திகை நாம் அந்த படைப்புக்கு தரும் மரியாதை.
நான் இயக்கும் படத்தை எத்தனை முறை பார்ப்பீர்கள் என்று கேட்டாரள் ஒரு முறை நிஜத்தில் எண்ணிப் பார்த்தேன் நிஜமாகவே 100, 150 முறை பார்ப்பேன், டப்பிங், ரெக்கார்டிங் என மீண்டும் மீண்டும் புசித்து, சாப்பிட்டுவிட்டு தான் உங்களுக்கு தருவேன். நீங்கள் வெற்றி பெற வைப்பதற்கு பார்ப்பதை விட அதிக முறை நான் பார்ப்பேன். இங்கு இந்த நாடகத்தில் விமர்சனம் என்பதே இல்லை, அத்தனை பேரும் அருமையாக செய்துள்ளார்கள். நடித்தவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் இணையத்தில் பார்க்க முடிகிற காலத்தில் இங்கு நேரில் வந்து ரசிக்கும் ரசிகர்களுக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
|
ReplyForward
|