கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய தி பேமிலி மேன் 2 வெப் தொடர் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ள சமந்தா, சமீபத்தில் தனது காதல் கணவரான நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வாமாக அறிவிப்பு வெளியிட்டவர் தனது தோழியுடன் ஆன்மிக பயணமும் மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து படங்களில் நடிப்பதிலேயே தீவிர கவனம் செலுத்த போவதாக கூறும் நடிகை சமந்தா,விவாகரத்துக்கு பின் ஏற்கனவே கோடிகளில் வாங்கி வந்த தன் சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்தி விட்டாராம்..தற்போது புதிய படங்களில் நடிக்க ‘கறாராக’ ‘4’ விரல்களை காட்டி வருகிறாராம்.