அருண்விஜய் நடிக்கும் பார்டர் படத்திற்கு முன்பே தணிக்கை செய்யப்பட்ட படம் டோனி சினிமாஸின் “பார்டர்” பலகட்ட டைட்டில் பிரச்சினைகளை முடித்து வருகிற 12 ஆம் தேதி வெளியாகிறது பார்டர் திரைப்படம். பிரபல பேஷன் டிசைனரும், லேண்ட் டெவலப்பருமான ஒசூர் தேன்கனிக்கோட்டையை சேர்த்த டோனி கதை நாயகனாக நடித்து இந்த படத்தை தயாரித்துள்ளார். இவர் ரூல்நெம்பர் 4, பேராண்டி, கன்னட திரைப்படமான “கடி” படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருடன் 5 படங்களில் நாயகியாக நடித்துள்ள தரணி , ரஞ்சிதா, சாய்தினா, பில்லி முரளி, கன்னட நடிகர் அவினாஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆனால் உண்மையில் தலைவிரித்தாடும் கூலிப்படைகளின் கோரமுகத்தை விவரிக்கிறது படம். ஆதரவற்றவர்கள் நல்லவர்கள் கைகளில் கிடைத்தால் பூவோடு நாறும் மணக்கும் என்பது போல அவர்கள் வாழ்வில் ஒளியேறும், அவர்கள் தீயவர்கள் கைகளில் சிக்கினால் வாழ்க்கையே இருட்டு பக்கமாகிவிடும். காட்சிக்கு காட்சி திரில்லராக சொல்லியிருக்கிறோம் என்கிறார்கள் .இப்படத்தின் ஒளிப்பதிவை செல்வகுமார் சங்கரலிங்கம் கவனிக்க,அலென் விஜய் இசையமைத்து வருகிறார். “பார்டர்” திரைப்படத்தை ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஷ் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறார்.