‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்த்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
இவர்களுடன்,இயக்குனர் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இதுவரை இப்படத்தின் 4-கட்ட படப்பிடிப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கியுள்ளன.
இது குறித்து ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,’பீஸ்ட் சண்டைக்காட்சி படப்பிடிப்புக்கு அதிநவீன ‘டில்டா ரிக்’ கேமராவை பயன்படுத்துவதாகவும், ரெட் நிறுவன ‘கொமோடோ’கேமராக்களுக்கு இந்த ‘ரிக்’ மிகச் சிறப்பாக இருப்பதாகவும்புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்