தற்போது நடிகர் விக்ரம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், ஞானமுத்துவின் கோப்ரா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில் இயக்குநர் பா ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பா ரஞ்சித் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து தற்போது ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்து வருகின்றனர். காதல் படமாக உருவாகி வரும் இப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் பா.ரஞ்சித் விக்ரமுடன் இணையவுள்ளார்.
இந்தப் படத்தை ‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.இப்படத்துக்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.