விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னர் நாகசைதன்யா- சமந்தா இருவரும் நடிப்பின் மீது முழுக்கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகசைதன்யா, ’என் வாழ்க்கைக்கு ஒரு காதல் கடிதம்’ என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரீன் லைட் என்ற புத்தகத்தை பதிவு செய்துள்ள அவர், ‘உங்கள் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேத்யூ’ என்றும்பதிவிட்டுள்ளார்.
சமந்தா பிரிவுக்கு பின்னர் விரைவில் நாக சைதன்யா தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில் நாகசைதன்யாவின் இந்த திடீர் பதிவு,வரும் பிறந்தநாள் அன்று தனது வாழ்க்கையில் புதிய முடிவு அல்லது காதல் குறித்து ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா? என்பதே அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.