தற்போது கமலின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன..திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என கமலை போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.
உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் கமல்ஹாசன் விரைவில் குணமடைய பிரார்த்தனை மற்றும் வாழ்த்து தெரிவித்து, வருகின்றனர்..
இந்நிலையில் கமலின் மூத்த வாரிசு,நடிகை ஸ்ருதிஹாசன், தனது தந்தை உடல்நிலை குறித்து தனது ட்விட்டரில் கூறியுள்ளதாவது,’எங்க அப்பா குணமடைய வேண்டி நீங்கள் அனைவரும் அளித்த வாழ்த்துக்கள் மற்றும் செய்துள்ள பிரார்த்தனைகளுக்கு நன்றி. அவர் மிக நன்றாக குணமடைந்து வருகிறார்.
விரைவில் அவர் உங்கள் அனைவரையும் சந்தித்து பேசுவார் என குறிப்பிட்டுள்ளார்.கமல் குணமடைந்து திரும்பி வரும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்க போவதாக கூறப்படுகிறது.
இந்த வார இறுதி இரண்டு நாட்களுக்கான எபிசோட்களின் ஷுட்டிங் நாளை நடைபெற உள்ளது. கமல் ஒப்புக் கொண்டால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு காணொளிக்காட்சி மூலம் கமலே தொகுத்து வழங்க போவதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.