இந்நிலையில் கமல்ஹாசன் சிகிச்சை பெற்று வரும் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் இன்று மதியம் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது அதில், நவம்பர் 22 ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு லேசான கொரோனா தொற்று இருந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் பூரணமாக குணமடைந்து விட்டார்.இருந்தாலும் வரும் டிசம்பர் 3 ம் தேதி வரை தனிமையில் இருக்கும் படி அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 4 ம் தேதி முதல் அவர் வழக்கமான பணிகளை தொடர சரியாகி விடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையால் அவரது கட்சியினரும் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வார சனிக்கிழமையான டிசம்பர் 4 ம் தேதியே மீண்டும் பிக்பாஸ் எபிசோடை தொகுத்து வழங்க உலகநாயகன் களமிறங்கி விடுவார் என்கிறார்கள்..கடந்த வாரம் மருத்துவமனையில்இருந்த படியே வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம், தான் நலமாக இருப்பதாகவும், தனக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கூறினார்.
ஆனால் ரம்யா கிருஷ்ணன் ஒருதலைப்பட்சமாகவும்,அவர் தங்க வேட்டை நிகழ்ச்சியையும், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியையும் ஞாபகப்படுத்துவதாகவும்,ஏராளமானோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். கமல் சீக்கிரம் குணமாகி வர வேண்டும்,ஆண்டவர், ஆண்டவர் தான் என்றும்கமல் சார் எப்போ வருவீங்க என கேட்டும் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கமல் இன்று இரவு அல்லது நாளை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்கிறார்கள்.