ஜீவி திரைப்படத்தில் முக்கோண தொடர்பியல் விதி எனும் கருவை வைத்து, கதை திரைக்கதை அமைத்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை குவித்த, இயக்குநர் பாபுதமிழ் “க்” படத்தில் மீண்டும் ஒரு புது வகை ஜானரில் ரசிகர்களை அசத்தியுள்ளார். ஒரு கால்பந்து விளையாட்டு வீரனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களும் அதனையொட்டி நடக்கும் ஃபேண்டஸி தருணங்களையும் மையமாக வைத்து, இத்திரைப்படம் உருவாகியுள்ளது. உலகளவில் உளவியல் த்ரில்லர் திரைப்படங்கள் ஏராளமாக வந்திருந்தாலும், உளவியல் ஃபேண்டஸி என்பது ரசிகர்களுக்கு மிகப் புதுமையானது. அந்த வகையில் புது அனுபவத்தை தரும் படமாக, ஜீவி படத்தை விடவும் பல திருப்பங்களும், ஆச்சர்யங்களும் கொண்ட த்ரில் அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
உளவியல்பேண்டஸி திரைப்படம் “க்” !
முழுக்க முழுக்க சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு பாடல் காட்சி மட்டும் மலேஷியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது.இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் மனதை மயக்கும் இசையை தந்துள்ளார். பியார் பிரேமா காதல் பட புகழ் எடிட்டர் மணிக்குமரன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். ‘