“தோப்புக்கரணம்” படத்தில் தாமரை! படக்குழுவுக்கு சென்சார் போர்டு கொடுத்த அதிர்ச்சி!!

” கைலா ” படத்தை தொடர்ந்து பூதோ பாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு  ” தோப்புக்கரணம் ”  என பெயரிட்டுள்ளனர்.இப்படத்தில்கோகன், அக்ஷய், நிரஞ்சன், ரிஷி, சந்துரு ஆகிய ஐந்து புதுமுகங்கள் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர்.
 கதாநாயகியாக  பிரபு தேவாவிடம் உதவியாளராக இருந்த தர்ஷிணி டெல்டா இப்படத்தின் மூலம்  கதாநாயகியாகஅறிமுகமாகிறார்.  தயாரிப்பாளர் பாஸ்கர் சீனுவாசன், மிஸ்டர் இண்டியா ஸ்டீவ் ஆகிய இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.

விரைவில் வெளியாகவுள்ள இப்படம் குறித்து இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன்  கூறியதாவது,’இஞ்சினியரிங் முடித்து விட்டு வேலை இல்லாமல் சுற்றி திரியும் 5 இளைஞர்கள் அந்த ஏரியாவில் தாதாவாக வலம் வரும் வரதனிடம் வேலைக்கு சேர முயற்சிக்கிறார்கள். ஒரு சூழ்நிலையில் தாதா வரதன் கடுப்பாகி இந்த ஐந்து பேரை நடு ரோட்டில் தோப்புக்கரணம் போட வைக்கிறான்அதனால் அவமானத்திற்குள்ளான அந்த 5 பேரும் இறுதியில் தாதா வரதனை தோப்புக்கரணம் போட வைப்பதே படத்தின் திரைக்கதை.படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு  தணிக்கை குழுவுக்கு  அனுப்பினோம்

படத்தை  பார்த்த தணிக்கை  குழுவினர் ‘யூ’ சான்றிதழ் வழங்க மறுத்து விட்டனர். இப்படத்தில்  கல்லூரி மாணவர்கள் தாங்கள் எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்று ஆசிரியரிடம் சொன்னதற்கும் எதிர்காலத்தில் அவர்கள் அதை செய்ய முடியாமல் போவது போல் ஒரு காட்சி வரும். அப்போது  பூ விற்கும் ஒருவர் ;;தாமரை;, தாமரை; என்று கூவி விற்பது போன்ற காட்சி இருக்கிறது. அந்த காட்சியை கண்டிப்பாக  நீக்க வேண்டும் என்று சொன்னதோடு இல்லாமல் படத்தில் சர்ச்சைக்குரிய  காட்சிகளும் வசனங்களும்  இருப்பதாக கூறி, இந்த படம் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று  “ஏ ” சர்டிபிகேட் வழங்கியுள்ளனர். இதை கேட்ட நாங்கள் அதிர்ச்சிக்ககு உள்ளாகினோம்.என்கிறார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை,ரவி சாமி, பரணி செல்வம் ஆகியோர் கவனிக்க,ஷரவண் கலை இசையமைத்துள்ளார் கென்னடி ப்ரியன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.