அலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், பெர்லினேல் ஸ்பெஷலின் ஒரு பகுதியாகத் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரிவின் முக்கிய அம்சம் மற்றும் அர்ப்பணிப்பு என்னவென்றால் சிறந்த சினிமாவை திரைப்பட விழாவின் மூலம் காண்பிப்பதாகும் . இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட படங்கள் கொரோனா தொற்றுநோய் காலத்தில் எடுக்கப்பட்டவை .
பென் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர் ஜெயந்திலால் கடா திரைப்படத் தேர்வு குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டவை , “திரு. பன்சாலி மீதும் அவரது உருவாக்கத்தின் மீதும் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் எங்கள் படம் திரையிடப்படுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது, ஆலியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்காக அஜய் தேவ்கனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் கதை.”
பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் கலை இயக்குனர் கார்லோ சத்ரியன் கூறுகையில், “பெர்லின் திரைப்பட விழாவில் கங்குபாய் கத்திவாடி திரைப்படத்தை திரையிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம், “என்கிறார். இப்படம் 18 பிப்ரவரி 2022 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.