இன்று எம்ஜிஆர்,மற்றும் பெரியார் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுவதை அடுத்து எம்ஜிஆர் குறித்தும் பெரியார் குறித்தும் கமல்ஹாசன் பதிவு செய்த டுவிட்டில் கூறியிருப்பதாவது:
நீண்ட காலத்திற்கான பார்வையோடு சிந்தித்து சமூகத்துக்கான தன் தத்துவத்தை அழுத்தம் திருத்தமாகப் பதிந்துவைத்தவர் பெரியார். அதனாலேயே இன்னும் சமூக எதிரிகள் பெரியாரை அஞ்சும் நிலை தொடர்கிறது. அந்த அறிவின் பெரியாரை நினைவுகொள்வோம்.
கலையின் மூலம் கிடைத்த பிராபல்யத்தை சமூக வெளியிலும் அரசியல் வெளியிலும் சிறப்பாகச் செயல்படப் பயன்படுத்த முடியும் என்பதை உலகிற்குக் காட்டியவர்களில் தனித்துவமிக்க எம்.ஜி.ஆர்.
அவர்களின் நினைவு நாளில் அவரின் வெற்றிகளை நினைவுகூர்வோம்.