நாயகனாக ருத்ரா நடித்துள்ளார். கடுகு படத்தில் நாயகியாக நடித்த சுபிக்ஷா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுபலக்ஷ்மி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
கதாநாயகிகள் நடிக்க ஒப்பந்தம் செய்யும்போது அக்ரிமெண்டில் பட புரோமோஷன்களுக்கு வருவோம் என்று கையெழுத்து போட்டாலும் பெரும்பாலும் அதை கடைபிடிப்பதில்லை அந்த வகையில்இந்த படத்தின் இசை வெயியீட்டிற்கு வருமாறு, தயாரிப்பாளரும், இயக்குனரும், நானும் மாறி மாறி அழைத்தும் வரவில்லை, நான் வெளியூரில் படப்பிடிப்பில் இருக்கிறேன் என்று ஏமாற்றுகிறார்.
இதற்கிடையே இசை வெளியீடு முடிந்து தற்போது படம் வருகின்ற 31 ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரமோஷன்களில் கலந்து கொண்டு படத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டும் வர மறுக்கிறார்.
அவருக்கு எந்தவொரு சம்பள பாக்கியும் இதுவரை வைக்கவில்லை இருந்தும் இதுபோல் நடந்து கொள்கிறார். என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. இது சம்மந்தமாக நடிகர் சங்கத்தில் புகார் அளிக்க போகிறோம்.
இந்த படத்தை உருவாக்க நாங்கள் அவ்வளவு கஷ்டப்பட்டோம் அதன் பலனாக 8 விருதுகளும் வாங்கியுள்ளது எங்களது படம் என்கிறார் மனவேதனையுடன் நாயகன் ருத்ரா.