இளசுகளை சூடேற்றும் வகையில் கோவாவில் தான ஹனிமூன் கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால், சமீபத்தில் தான் ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்து திடிரென விலகினார்.
அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் நடித்துவரும் படங்களில் இருந்து விலகி வந்ததாக கூறப்பட்டது, ஆனால் இது குறித்து காஜல் தரப்பில் எந்த ஒரு கருத்தும் வெளியிடப்படவில்லை
இந்நிலையில், காஜல் அகர்வாலின் கணவர் கவுதம் கிச்சலு, தனது இன்ஸ்டாகிராமில், காஜலுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, “இதோ 2022 இல் உங்களைப் பார்க்கிறேன்” என்று முதல்முறையாக சமூக வலைதளத்தில் காஜல் கர்ப்பமாக இருப்பதாக எமோஜியுடன் அறிவித்து உள்ளார் .இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் காஜலுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்