அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும்வேகவேகமாக நடந்து வந்தது.இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை மற்றும் ஓமிக்கிரான்தொற்றும் மிக வேகமாக பரவத் தொடங்கியது.
இதையடுத்து .தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் திரையரங்குகளுக்கு 50% பார்வையாளர்கள் என்ற கட்டுப்பாடு என்றும் அறிவிக்கப்பட்டதால் அஜித்தின் ’வலிமை’ திட்டமிட்டபடி வெளியாகுமா என்றும்,அப்படி வெளியானால்திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் வருமா என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் சந்தேகம் எழுபி வந்தனர்.
இந்நிலையில் தற்போது ’வலிமை’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’ ரசிகர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு ’வலிமை’ படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்படுவதாகவும், விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம் என்றும் அந்த அறிக்கையில் படக்குழுவினர்தெரிவித்துள்ளனர்