பிரதான நாயகியாக மோக்க்ஷாநடிக்க இவருடன் கௌரி சர்மா நடித்திருக்கிறார்.
இந்திய முன்னணி மாடலான மதுமிதா, அக்ஷரா ராஜ் ,பிரபல மாடல் பர்சிதா ,இன்னொரு மாடல் ஆரத்தி கிருஷ்ணா என 5 கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
நீளமான தாடி வைத்துள்ளவர்களுக்கான போட்டியில் உலக அளவில் இரண்டாம் இடமும் இந்திய அளவில் முதலிடமும் பெற்ற ப்ரவீன் பரமேஸ்வரர் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார்.
படத்தின் கதை என்ன?
தனது காதலியின் திடீர் மரணத்துக்குக் காரணம் முகம் மறைத்துத் திரியும் சைக்கோ கொலைகாரன் என்ற உண்மை நாயகனுக்குத் தெரிய வருகிறது.
அவனைப் பழி வாங்க புறப்படுகிறான் நாயகன்.இதற்கிடையில் பில்லி சூனியம் ஏவல் போன்ற அமானுஷ்ய சக்திகள் விளையாடுகின்றன.இதன் பின்னணியில் பரபரப்பாகச் செல்கிற படம் தான் ‘ஏவாள்’.படத்தின் திகில் காட்சிகள் நவீனத் தொழில்நுட்பத்தில் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்டுள்ளன.
இந்திய சினிமாவின் முதல் சூனியக்காரி படமாக உருவாகியுள்ள ஏவாள் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.