ஏற்கனவே ஸ்ரீஜா தனது கணவர் கல்யாண் தேவிடமிருந்து பிரிந்துவிட்டதாக பரபரப்பான வதந்திகள் பரவி வந்த நிலையில் ஸ்ரீஜா தனது இன்ஸ்டாகிராமிலிருந்து தனது கணவர் கல்யாண் தேவ் பெயரை நீக்கிவிட்டு தனது இயற்பெயரான ஸ்ரீஜா கொனிடேலா என மாற்றியுள்ளார். இதனால் இவர்களின் பிரிவது உறுதியாகிவிட்டதாக இணையத்தில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.
ஸ்ரீஜா ஏற்கனவே கல்லூரியில் படிக்கும் போது சிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அடுத்த சில வருடங்களில் வரதட்சணை விவகாரம் தொடர்பாக சிரிஷ் பரத்வராஜிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்களுக்கு நிவிரிதி என்ற மகளும் உள்ளார்
இந்நிலையில் விவாகரத்து வதந்தி குறித்து சிரஞ்சீவியும் அவரது மகள ஸ்ரீஜாவும் இதுவரை எதுவும் தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.