சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘லிஃப்ட்’ திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம், பெரிய அளவில் பாராட்டுக்கள் குவித்த நடிகர் கவின், இந்த வலைத் தொடரில் நாம் தினமும் சந்திக்கும் எதிர் வீட்டு அழகான இளைஞனாக நடிக்கிறார், ரெபா மோனிகா ஜான் அவரது காதலியாக நடிக்கிறார். ஆஹா நிறுவனம் தமிழில் இந்தத் தொடரினை திரையிடவுள்ளது, விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஷரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கடராமன், மேகி எனும் மார்கரெட், மெல்வின், ஜான்சன் மற்றும் கவிதாலயா கிருஷ்ணன் ஆகியோர் இத்தொடரில் இணைந்து நடிக்கின்றனர்.
எனோக் ஏபிள் இத்தொடரை இயக்கியுள்ளார், பிகில், மெர்சல், தெறி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு திரைக்கதை எழுதிய ரமணன் கிரிவாசன் கிரியேட்டிவ் ஹெட்டாக பணிபுரிகிறார். சாந்தகுமார் சக்ரவர்த்தி (அமலா பாலின் அதோ அந்த பறவை, அர்ஜுன்-ஹர்பஜன் சிங் நடித்த ஃபிரண்ட்ஷிப் படப்புகழ்) ஒளிப்பதிவு செய்கிறார். குணா பாலசுப்ரமணியம் இசையமைக்கிறார்.