மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ,கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.
.ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் நரேன், காளிதாஸ் ஜெயராம்,அர்ஜுன் தாஸ், ஷிவானி நாராயணன்,ஸ்வஸ்திகா கிருஷ்ணன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது கடந்த வருடம் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு காரைக்குடி, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் வேகத்தில் நடத்தப்பட்டு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வரும் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் இப் படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும் ஏப்ரலில் இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்து பம்பரமாக சுழன்று வருகிறது..அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தின் ஒளிப்பதிவை . க்ரிஷ் கங்காதரன் கவனித்துள்ளார்.