பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் கார்த்திகேயன் வழங்கும்,,நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில்,
இயக்குநர் பாண்டியன் ஆதிமூலம் இயக்கத்தில் ,இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹர்ஷ வர்தன் அறிமுகமாகும் புதிய திரைப்படம் !இன்னும் பெயர் வைக்கவில்லை. ராசி பார்த்து ,எண் ஜோதிடம் பார்த்து வைக்கிற காலம் அல்லவா?!
சிபியின் , திரைப் பயணத்தில் தனித்தன்மை மிக்க, சிறந்த உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம், தொடர்ந்து சிறந்த வெற்றிப்படங்களை வழங்கி, நம்பிக்கையான நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது அடுத்தடுத்த திரைப்பட வரிசைகள் மிகவும் நம்பிக்கைக்குரியதாக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதோ தற்போது இன்னும் ஆர்வத்தை தூண்டும் வகையில், அவரது புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வந்துள்ளது. இது நடிகர் சிபி சத்யராஜின் 20வது படம். மொழி எல்லைகளை கடந்து ரசிகர்களை ஈர்க்கும் வகையிலான கதைக்கருவுடன் இப்படம் உருவாகிறது.
இத்திரைப்படம் முதல் பாதியில் குடும்ப உணர்வுகளை பேசும்படியும், அதைத் தொடர்ந்து இரண்டாவது பாதியில் கதாநாயகனுக்கும் எதிரிக்கும் இடையே ஆடு புலி ஆட்டமாக பரபரப்பான ஆக்சன் அதிரடி திரில்லர் கதையாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ வர்தன் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்
இந்தப் படத்திற்கு பிரவீன் குமார் (ஜிவி, கிளாப் மற்றும் ஹாஸ்டல் படப்புகழ்) ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் பணியாற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
அறிமுக இயக்குநரான பாண்டியன் ஆதிமூலம், எஃப்எம், டிவி, ரியாலிட்டி ஷோக்கள், டிவி தொடர்கள் மற்றும் திரைப்படத் துறையில் என கடந்த பத்தாண்டுகளாக ஊடக உலகில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது, விரைவில் தொடங்கப்படும் ஓடிடி தொடர் ஒன்றுக்கு வசனங்களையும் திரைக்கதையையும் எழுதியுள்ளார்.