‘விஜய் 66’ படத்தில் இணையும் ராஜமவுலி பட ஹீரோ?

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில்,விஜய்யின் அடுத்த படமான ’தளபதி 66’படத்தின் படப்பிடிப்பும் அதே மாதம் தொடங்க உள்ளது.

வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகும் இப் படத்திற்காக தற்போது அரங்கம் செட் அமைக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ’

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க உள்ளதாகவும், தமன் இசை அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப் படம் வரும்  தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு( 2023) பொங்கலுக்கு வெளியாகும் என்கிறது படக்குழு.

இந்நிலையில் இப்படத்தில் விஜயுடன் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’. பட நாயகன் நானி,முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.