யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப் படத்திற்கு, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.இதில், தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடித்து வருகிறார்.
இந்நிலையில், ‘நானே வருவேன்’ படத்தின் இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் பிறந்தநாளான இன்று, தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டு,”இயக்கத்தில் சிகரம் தொட்ட @selvaraghavan, நடிப்பிலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்” என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, தன்னுடைய ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.