காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா, நாகசைதன்யா ஆகிய இருவரும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரிவதாக அறிவித்து பிரிந்தனர்.இது திரையுலகினர் மத்தியில்கட்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் இருவரும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் இருவரும் மீண்டும் இணைந்து விடக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக தெலுங்குத்திரையுலகில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், சமந்தா தனது திருமண புடவையை நாகசைதான்யாவின் குடும்பத்திடம் திரும்பி கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சமந்தாவின் இச்செயலால் நாக சைதன்யாவின் குடும்பே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாம். இவர்கள் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் , சமந்தா நாக சைதன்யா சம்பந்தப்பட்ட எதையும் தன்னிடம் இருக்கக் கூடாது என முடிவு எடுத்து விட்டதாக சமந்தாவின் நெருக்கமான தோழிகள் தரப்பு தெரிவிக்கிறது.