இந்த அணியை சேர்ந்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் 1720 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.. அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐசரி கணேஷ்1032 வாக்குகள் பெற்றார் பாண்டவர் அணி சார்பில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் 1612 வாக்குகளும், கருணாஸ் 1605, நாசர் 1701 வாக்குகளும், பாக்யராஜ் 1054 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தலைவராக நாசர், துணைத்தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ், செயலாளராக விஷால் , பொருளாளராக கார்த்தி ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.மீண்டும் நிர்வாகிகளாக நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்க இருக்கும் நிர்வாகிகளுக்கும், வெற்றிவாகை குடிய அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.