அருண் விஜய் இது தொடர்பாக மேலும் பேசுகையில், ” அது ஆர்ணவ்வின் உலகம். சிம்பா நன்கு வளர்ந்தவர். இரண்டு மூன்று குட்டிகளுடன் வளர்ந்து கொண்டிருந்ததால் எங்களிடம் வந்தன. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பின் போது வெவ்வேறு குட்டிகள் வளர்ந்து வருவதால், அவற்றினோடும் படப்பிடிப்பில் நடிக்க வேண்டியிருந்தது. நாய்க்குட்டிகள் எப்படி நடந்து கொள்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். அவற்றில் சில நாய்க்குட்டி ஆர்ணவ்வை கடிக்கத் தொடங்கியது. அவை சிறிய குட்டிகள் என்பதால் அவை கடிக்கின்றனவா? இல்லையா? என்பது கூட தெரியாது. சில குட்டிகள் கூர்மையான பற்களால் கடிக்கத் தொடங்கியது. ஆனால் அதனை ஆர்ணவ் சரியாக எதிர்கொண்டான் . கைகளில் ஏற்படும் கீறல்களால் எந்த பிரச்சனையும் இல்லை. அது சிறிய காயம் என்று அவன் கூறினான் . பிறகு கைகளை சானிடைசரை கொண்டு சுத்தப்படுத்திக் கொண்டு நடித்தான் . ஏனெனில் அவனுக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த விசயம் அந்த தருணத்தில் அவனுக்கு உதவியது. படத்தில் ஆர்ணவ்வுடன் நாய்க்கும் இருக்கும் தொடர்பு உண்மையாக இருந்தது. அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவும் விரும்பினான் .” என்றார்.
‘ஓ மை டாக்’ ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை ஒன்றாக ஒன்றிணைத்திருக்கிறது. நிஜ வாழ்க்கையில் தாத்தா- தந்தை- மகன் என மூவரும் விஜயகுமார், அருண் விஜய் மற்றும் ஆர்ணவ் விஜய் முதல் முறையாக திரையில் தோன்றுகிறார்கள். இவர்களுடன் மகிமா நம்பியார் மற்றும் வினய் ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், சரோவ் சண்முகம் இயக்கத்தில் அமேசான் ஒரிஜினல் திரைப்படமாக ஏப்ரல் 21ஆம் தேதியன்று பிரைம் வீடியோவில் வெளியாகிறது.