அருள்நிதியின் அடுத்த சமரசமற்ற ஹாரர் படம்.!

நடிகர் அருள்நிதி இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணி மீண்டும், ‘டிமான்டி காலனி’  இரண்டாம் பாகத்திற்காக இணைந்துள்ளது. !

இவர்கள்  அமானுஷ்ய த்ரில்லரான “டிமான்டி காலனி”யை  வழங்கி இருந்தார்கள் . தற்போது படத்தின் இரண்டாம் பாகமான “டிமான்டி காலனி 2″ படத்திற்கான அறிவிப்பு வெளி வந்திருக்கிறது.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி,  இயக்குநர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார்.

நடிகர் அருள்நிதி, தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வித்தியாசமான பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடன் செயல்பட்டு, திரையுலகில் ஒரு பெரிய நிலையை அடைந்துள்ளார். தனித்துவமான திரைக்கதைகளைக் கொண்ட எழுத்தாளர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் தங்கள் திரைக்கதைகளை கூற ‘முதல் இலக்கு’ என்று அவரைப் பாராட்டுவதுடன்,  தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பார்வையாளர் அருள்நிதியை ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று போற்றுகிறார்கள் என்பது, குறிப்பிடத்தக்கது.

டிமான்டி காலனி மூலம் அறிமுகமான திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, இமைக்கா நொடிகள் மற்றும் விரைவில் வரவிருக்கும் ‘கோப்ரா’ போன்ற பெரிய படங்களின் மூலம் இப்போது முதன்மையான திரைப்பட இயக்குநர்களின் பட்டியலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
இது குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறியதாவது…
டிமான்டி காலனியை ஒரு சமரசமற்ற ஹார்ட்-கோர் ஹாரர் தொடராக முன்னோக்கி எடுத்துச் செல்லவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம், இது இனி அடுத்தடுத்த பாகங்களைக் கொண்டிருக்கும். ஜூலை 2022 க்குள் டிமான்டி காலனி 2 இன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். தற்போது, முன்னணி கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், அதன்படி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம். “ என்றார்.
அஜய்ஞானமுத்துஅருள்நிதிடி ஒன்டிமான்டி காலனி 2