தயாரிப்பாளர் எஸ்.பி. ராஜா சேதுபதி, இயக்குனர் ஏ.வி. கிருஷ்ண பரமாத்மா,(மண்டேலா) படத்தின் நாயகி ஷீலா ராஜ்குமார், இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, துணை நடிகர் ஹரி க்ரிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தின் முதல் பாடல் காட்சி திரையிடப்பட்டது. இப்பாடலின் இறுதியில் வரும் கடைசி மூன்று ஷாட்ஸ் ஒரு ஹைக்கூ கவிதை போன்று இருந்ததாகவும், படத்தை பார்க்க மிகுந்த ஆர்வத்தை தூண்டுகிறது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். அதன்பின்
மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று படத்தின் முதல் பத்து நிமிட காட்சி மாணவர்களுக்கு திரையிடப்பட்டது.
‘சதுரங்க வேட்டை படத்தொகுப்பாளராகிய நான் இந்த படத்தை தயாரித்தற்கு முக்கிய காரணமே சென்னை உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் சதுரங்க வேட்டை படத்தை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கப்பட்டது,
அதுபோலவே ஜோதி படத்தின் கரு சாமானிய பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனதை உலுக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டிருந்தது. சமூக அக்கறை உள்ள நல்ல திரைப்படங்களை மக்கள் எப்போதும் கைவிட்டது இல்லை.இதன் கருவும், நடந்த சம்பவமும், இதன் பின்னணியும் என் தூக்கத்தை தொலைத்தது. இதனால் ஜோதி திரைப்படத்தை தயாரித்திருக்கிறேன்.” என்று கூறினார்.
இப்படத்தை பற்றி இயக்குனர் கிருஷ்ண பரமாத்மா கூறியதாவது.
“சமூக அக்கறைகொண்ட கதை கருவை விறுவிறுப்பான திரைக்கதையுடனும்,எதார்த்தமான வசனங்களுடனும் எடுக்கப்பட்ட “ஜோதி ” திரைப்படம் எமோஷனல் கலந்த கிரைம் திரில்லராக வந்திருக்கிறது. ” என பேசினார்.
இப்படத்தைப் பற்றி பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா ,இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் , துணை நடிகர் ஹரி க்ரிஷ் , நடிகை ஷீலா ராஜ்குமார், ஆகியோரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர்.