லட்சுமிகாந்தன் கொலை வழக்கு: தூசு தட்டப்படுகிறது.மர்மம் வெளியாகுமா?

சென்னை ராஜதானியில் நடந்த பிரபல கொலை வழக்கினை சோனி லைவ் தனது ஓடிடி தளத்தில் வெப் தொடராக வெளியிட இருக்கிறது.

1944-47 இடையேயான காலகட்டத்தில் பத்திரிகைகள் பத்தி பத்தியாக வெளியிட்டு கல்லாவை நிரப்பிக்கொண்ட லட்சுமி காந்தன் கொலை வழக்கு இந்த வெப் தொடரின் ஆதாரம்.

 “THE MADRAS MURDER” (தி மெட்ராஸ் மர்டர்) என தலைப்பிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரினை சூரியபிரதாப்.எஸ். எழுதி-இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பாக ஐ.பி. கார்த்திகேயன் தயாரிக்கிறார். இயக்குனர் ஏ.எல் .விஜய் SHOWRUNNER-ஆக செயல்படவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை சம்பவம் அதாவது ஆட்டோ சங்கர் மாதிரி.

அந்த காலத்தில் சினிமா நடிக நடிகையரின் அந்தரங்கங்களை தன்னுடைய ‘இந்துநேசன் ‘மஞ்சள் பத்திரிகையில் எழுதி காசுகளை பார்த்தார் லட்சுமி காந்தன் என்கிற பத்திரிகையாளர்.

எங்கே தங்களைப்பற்றியும் தாறுமாறாக எழுதி அசிங்கப்படுத்திவிடுவாரோ என்று பலர் அவருக்கு பை,  பையாக பணம் கொடுத்து வந்தார்கள். அசிங்கத்துக்குப் பயந்தே நல்லவர்களும் பணத்தை கொடுத்தார்கள் என்பதுதான் மகா சோகம்.

1944 ,நவம்பர் மாதம் சென்னை வேப்பேரியில் வைத்து லட்சுமி காந்தன் கத்தியினால் குத்தப்பட்டார். மறுநாள் சென்னை  பொது மருத்துவமனையில் உயிர் பிரிகிறது.

இந்த கொலை தொடர்பாக எம்.கே.தியாகராஜ பாகவதர் ,கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ,இயக்குநர் ஸ்ரீராமுலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அந்த காலத்தில் இந்த மூவருமே மக்களால் மிகவும் மதிக்கப்பட்டார்கள் ,போற்றப்பட்டார்கள் .சூப்பர் ஸ்டார்கள் .இதில் ஸ்ரீராமுலு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் பாகவதர் ,கலைவாணர் இருவருமே சிறையில் அடைக்கப்பட்டனர் .

 உண்மையாகவே பரபரப்பு ,கவலை ,என கலந்து கட்டி சென்னை மாகாண மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

அந்த சம்பவத்தை மையமாக வைத்து வரவிருக்க வெப் தொடரில் யார் யார் நடிகர்கள் என்பது இன்னமும் தேர்வாகவில்லை. வேப்பேரியில் குத்து வாங்கிய லட்சுமி காந்தன் புரசை வாக்கத்தில் உள்ள வக்கீலின் வீட்டுக்கு சென்று சம்பவங்களை பதிவு செய்திருக்கிறார். 

ஆனாலும் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை என்பதாகவே இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வெப் தொடர் அந்த புதிர்களுக்கும், மர்மங்களுக்கும் விடை கொடுக்குமா ?

எதிர்பார்க்கலாம்.

ஏ எல் விஜய்கலைவாணர்கார்த்திகேயன்சூரிய பிரதாப்சோனி லைவ்பாகவதர்.லடசுமிகாந்தன் கொலை வழக்கு